
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை அடுத்த மாதம் 10ஆம் திகதி நடத்த, நேற்று (19) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
36 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சி நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





