இலங்கை

QR குறியீடு கிடைக்கவில்லையா? : இதோ புதிய தீர்வு

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

 

எனவே, மீண்டும் முயற்சிப்பதன் மூலம் இந்த QR குறியீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

 

தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

 

அதன்படி, இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இதேவேளை, QR ஒதுக்கீடு இந்த வார இறுதியில் முடிவடைவதால், QR குறியீட்டைச் சீர்செய்து எரிபொருள் அளவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், சில தரப்பினரிடம் உள்ள வாகனப் பதிவுச் சான்றிதழ் முறையாக

மாற்றப்படாமல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதற்காகப் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, 9 மாகாணங்களுக்கும் 9 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

 

அதன் ஊடாக அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் செய்து கொடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button