இலங்கை

மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனை – திங்கட்கிழமை அடுத்தக்கட்ட நடவடிக்கை

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதன்படி, சம்பந்தப்பட்ட திட்டம் குறித்த பொதுமக்களின் ஆலோசனை கோரல் உட்பட அடுத்த செயல் திட்டம் குறித்த தகவல்கள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிப்பதற்கான முன்மொழிவை கடந்த 13 ஆம் திகதி மின்சார சபை சமர்ப்பித்திருந்தது.

முன்னதாக, 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்காக மின்சார சபை சமர்ப்பித்த 11.57% கட்டண அதிகரிப்புத் திட்டத்துக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

 

தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தம் குறித்து, பொதுமக்களின் சமர்ப்பிப்புகள் மற்றும் ஏனைய காரணிகளைக் கருத்திற் கொண்டே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி முடிவை எடுக்கவுள்ளது

.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button