உலகம்

வேற்று கிரகவாசிகள் விவகாரம் – ஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

வேற்று கிரகவாசிகள் (Aliens) குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்ட கருத்துக்கள், அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

 

ஒபாமா ரகசியத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் பெரிய தவறு செய்துவிட்டதாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

 

 

 

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “வேற்று கிரகவாசிகள் உண்மையா?” என்ற கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, “அவை உண்மை, ஆனால் நான் அவற்றை நேரில் பார்த்ததில்லை” என்று குறிப்பிட்டார். மேலும், ரகசிய இடங்களில் வேற்று கிரகவாசிகள் மறைத்து வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்தக் கருத்துக்கள் இணையத்தில் விவாதமானதைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்த ஒபாமா:

 

“விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் பிரபஞ்சம் மிகப் பெரியது, எனவே எங்காவது உயிர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், எனது பதவிக்காலத்தில் வேற்று கிரகவாசிகள் நம்மைத் தொடர்பு கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லை.” என்று தெளிவுபடுத்தினார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், “ஒபாமா ரகசியத் தகவல்களை வெளியிட்டுப் பெரிய தவறு செய்துவிட்டார். அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது” என்று கூறினார்.

 

வேற்று கிரகவாசிகள் குறித்த தனது நிலைப்பாடு பற்றிப் பேசிய டிரம்ப், அவை உண்மையா இல்லையா என்பது தனக்குத் தெரியாது எனப் பதிலளித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button