
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்பதாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்று அவசியமென இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆரம்பித்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 6 ஆவது நாளாகவும் தொடர்கின்றது
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன் குறித்து விசாரிப்பதற்காக இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் இன்றைய தினம் போராட்ட இடத்திற்கு வந்திருந்தார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ஒருவர் நேற்று உறுதியளித்திருந்த போதிலும் எனினும், திங்கட்கிழமைக்கு முன்னதாக இந்தப் பேச்சுவார்த்தை வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், கொழும்பில் பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என விராஜ் மனரங்க எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்குவதற்காக, அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று அஸ்கிரி தரப்பு மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரைச் சந்தித்து கலந்துரையாடினர்.





