இலங்கை

நெடுந்தீவு அருகே 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது : 2 படகுகள் பறிமுதல்

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
தமிழக, கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டிய கடற்றொழில் ஈடுபட்டிருந்த 7 தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு வந்த கடற்றொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு நாட்டுப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து வந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button