விளையாட்டு

எஸ்எல்சி ரி20 லீக்: கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் சம்பியனானது

எஸ்எல்சி ரி20 லீக்: கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் சம்பியனானது

எஸ்எஸ்சி மைதானத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான எஸ்எல்சி ரி20 லீக் இறுதிப் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலன டீம் க்றேஸ் அணியை 23 ஓட்டங்களால் வெற்றிகொண்ட கமிந்து மெண்டிஸ் தலைமையிலான டீம் க்றீன்ஸ் அணி தோல்வி அடையாத அணியாக சம்பியனானது.

இந்த வெற்றியில் குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் பெரும் பங்காற்றினர்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டீம் க்றீன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைக் குவித்தது.

முதல் பந்திலேயே காமில் மிஷார ஆட்டம் இழந்தபோதிலும்

குசல் மெண்டிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் பானுக்க ராஜபக்ஷவுடன் 56 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் சதீர சமரவிக்ரமவுடன் 55 ஓட்டங்களையும் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

குசல் மெண்டிஸ் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 77 ஓட்டங்களைப் பெற்றார். பானுக்க ராஜபக்ஷ 18 ஓட்டங்களைப் பெற்றார்.

சதீர சமரவிக்ரமவும் கமிந்து மெண்டிஸும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 41 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு கணிசமான மொத்த எண்ணிக்கை கிடைக்க உதவினர்.

சதீர சமரவிக்ரம 49 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டீம் க்றேஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல ஆகிய இருவரும் அதிடிரயாகத் துடுப்பெடுத்தாடி 36 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து மிகச் சிறப்பான  ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

நிரோஷன் திக்வெல்ல 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 21 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ}டன் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆனால், அதன் பின்னர் நுவனிது பெர்னாண்டோ (13), சரித் அசலன்க (21), ரமேஷ் மெண்டிஸ் (14) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கமிந்து மெண்டிஸ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ். தொடர்நாயகன்: சாமிக்க கருணாரட்ன (95 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்)

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button