இலங்கை

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சரவை அமைச்சர் பிரதமருக்கு சவால் விடுவது இதுவே முதல் தடவை என்றும் எனவே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நவீன் திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

சுப்ரீம்செட் பற்றிப் பேசுவதன் மூலம் அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு சவால் விடுத்துள்ளார் என்று அவர் கூறினார்.

அமைச்சர் வசந்த சமரசிங்கவின் செயற்பாடு

வெளியே பேசுவதற்குப் பதிலாக அமைச்சர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்குள் விவாதித்து, பிரதமரின் கருத்துகள் குறித்து தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

இன்று அமைச்சர்கள் நடந்துகொள்வது போல் அமைச்சரவை அமைச்சர்கள் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை.

முன்னுதாரணமான எனது தந்தை

எனது தந்தை, மறைந்த அமைச்சர் காமினி திசாநாயக்க மற்றும் மறைந்த அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஆகியோர் 1980 ஆம் ஆண்டு மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடிமை உரிமைகளை ஒழிக்கும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்தனர்.

அமைச்சரவைக்குள் இந்த நடவடிக்கை குறித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும், இன்று நடந்ததைப் போல அவர்கள் பொதுவில் எதையும் கூறவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button