இலங்கை

இலங்கை வரும் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை(06) வருகைதரும், சமந்தா ஜாய் மோஸ்டின் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த அரசமுறை விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் உள்ள அவுஸ்திரேலிய ஆதரவுடன் இயங்கும் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button