
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை எதிர்காலத்தில் நிறைவேற்றப்படாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம் முழுமையாக ரத்து செய்யப்படும். அதன் பின் வாழ்வாதாரத்தில் சிரமம் இருப்பின், அஸ்வெசும் திட்டத்திற்காக அவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்த அடிப்படையில் நியாயமான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.





