
தமிழக அரசாங்கம் புதிதாக ஆரம்பிக்கவுள்ள அல்லது தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ குறித்த விளம்பரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், தீர்ப்பை அறிவித்த சென்னை மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம், இந்திய உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதல்வரின் படத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், கட்சியின் கொள்கை தலைவர்களின் படத்தையோ, முன்னாள் முதல்வரின் படத்தையோ பயன்படுத்துவது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





