
2023 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியைச் சேர்ந்த 108 உறுப்பினர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு 10 ஆண்டு காலம் சிறைத்தண்டனையும் 6 பிடிஐ உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





