தமிழீழம்

வெள்ள இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடரும் மக்களுக்கான நிவாரணப்பணி- உறவுகளுக்கு கைகொடுப்போம்.

தாயகத்தில் இடம்பெற்றுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக அல்லலுறம் மக்களுக்கு சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கும் உறவுக்கு கைகொடுப்போம் அமைப்பின் நிதி ஆதரவில் 18.12.2023 திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட திராட்டிகுளம் கிராமத்தில் வசிக்கும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்
20.12.2023 திகதி மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னஊரணி கிராமம் மற்றும் கிரான் பிரதேசசெயலகபிரிவுக்குட்பட்ட முறுத்தானை, கல்லடிவெட்டை, கானந்தனை, கிராமங்களில் வசிக்கும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு வெளிச்சம் நிறுவனம் ஊடாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது . இதற்கான நிதி ஆதரவினை உறவுக்கு கைகொடுப்போம் அமைப்பானது சுவிஸ் நாட்டில் வசிக்கின்ற தமிழீழ தமிழர்களின் ஆதரவுடன் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button