உலகம்தமிழீழம்

அவுஸ்திரேலியா நாட்டின் ஐந்து பெருநகரங்களில் தியாகதீபத்தின் நிகழ்வுகள்.

அவுஸ்திரேலியா நாட்டின் ஐந்து பெருநகரங்களில் தியாகதீபத்தின் நிகழ்வுகள் இடம்பெற உள்ளன இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்:

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், அவுஸ்திரேலியாவின் ஐந்து பெருநகரங்களிலும் சிறப்பாக நடைபெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினார்.

உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம், எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வுகளில் நிங்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button