தமிழீழம்

யாழ்ப்பாணத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை  (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு  அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர்.

அது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில், அப்பகுதியில் தொடர்ந்து அகழ்வு பணிகளை முன்னெடுக்க அனுமதி கோர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீதிமன்ற கட்டளை கிடைத்ததும் அவ்விடத்தில் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுக்க உள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button