சுவிஸ் அரசின் உளவு அமைப்பான NDB, வெளிநாட்டு உளவு அமைப்புகளின் உதவியை மிகவும் நம்பியிருக்கிறது. அந்த நட்பு நாடுகள் எதிர்காலத்தில் விலகிப் போகலாம் என்று ஒரு பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கிறார்.
NDB-யில் சுமார் 450 பேர் வேலை செய்கிறார்கள். வலே மாநிலத்தில் (Valais) உள்ள லொய்க் (Leuk) என்ற இடத்தில் செயற்கைக்கோள் நிலையம் இருக்கிறது. அங்கே உலக நாடுகளுக்கு இடையே போகும் தகவல்களை இடைமறித்து ஆராய்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளின் உளவு அமைப்புகள் தரும் தகவல்களும் அதே அளவு முக்கியம்.
கடந்த ஆண்டு வெளிநாட்டு அமைப்புகள் சுவிஸுக்கு கிட்டத்தட்ட 13,000 தகவல்களை அனுப்பின. சுவிஸ் திருப்பிக் கொடுத்தது சுமார் 3,900 மட்டுமே. கொடுக்க குறைவாக இருந்தால் கூட்டாளிகளைத் தக்க வைப்பது கடினம் என்கிறார் நிபுணர் ரால்ஃப் வேபர் (Ralph Weber). ஜெர்மனி, பிரிட்டன் அமைப்புகளோடு ஒப்பிட்டால் சுவிஸ் அமைப்பு பல மடங்கு சிறியது.
இதனால் உளவுச் சட்டத்தை மாற்றி வருகிறார்கள். புதிய சட்டம் NDB-க்கு உளவு பார்ப்பதில் கூடுதல் அதிகாரம் தரும். ஆனால் கூடுதல் பணம் கொடுக்க வேண்டுமா என்பதில் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது.
சோசலிஸ்ட் கட்சி (SP) எம்.பி. ஃபேபியன் மோலினா, முதலில் அந்த அமைப்பு தன் உள் சீர்திருத்தத்தை முடிக்க வேண்டும் என்கிறார். கடந்த ஆண்டுகளில் அங்கே பல சர்ச்சைகள் நடந்தன. SVP கட்சி எம்.பி. வால்டர் கார்ட்மன் (Walter Gartmann) வேறு கருத்தில் இருக்கிறார். உளவு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்கிறார். சீனாவைக் கருத்தில் கொண்டு, தென் கொரியா, ஜப்பானுடன் தகவல்களைப் பகிர வேண்டும் என்பது அவர் கருத்து.
மூலம்: SRF
புகைப்படம்: SpaceX / Unsplash





