சுவிஸ்

“பள்ளிக்குப் பணம், போருக்கு அல்ல” – டிச்சீனோவில் இளைஞர்கள் வேலைநிறுத்தம்

டிச்சீனோ மாநிலத்தில் (Ticino) வரும் 20 நவம்பர் வெள்ளிக்கிழமை இளைஞர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். அரசு செலவைக் குறைப்பதையும், ராணுவத்துக்குக் கூடுதல் பணம் ஒதுக்குவதையும் எதிர்த்து இந்தப் போராட்டம் நடக்கிறது.

சோசலிச இளைஞர் அணி இதை ஏற்பாடு செய்கிறது. பள்ளிகளுக்கும் சமூக நலத் திட்டங்களுக்கும்தான் முதலில் பணம் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. இதே நாளில் மற்ற இடங்களிலும் போராட்டங்கள் நடக்கும்.

பெலின்சோனா (Bellinzona) ரயில் நிலைய முன்றலில் மதியம் 12.30-க்கு எல்லோரும் கூடுகிறார்கள். மூன்று மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு, ஃபோச்சே சதுக்கத்துக்குச் (Piazza della Foce) செல்லும். அமைப்பில் இல்லாதவர்களும் வரலாம் என்று ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள். சமீபத்தில் பாரிஸ், மிலானில் இளைஞர் போராட்டங்களில் கலவரம் நடந்தது. இங்கே போலீஸ் அனுமதி கொடுத்திருக்கிறது. ஊர்வலத்தின் ஓரங்களில் ஏற்பாட்டாளர்களே பாதுகாப்புக்கு நிற்பார்கள். பெரிய பிரச்சினை வராது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

மாநிலக் கல்வித் துறை (DECS) ஒரு முடிவு எடுத்திருக்கிறது. மதியம் வகுப்புக்குப் போகாமல் போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களின் விடுப்பை ஏற்றுக்கொள்ளும். காலையில் விடுப்பு கொடுப்பதை சில பள்ளி நிர்வாகங்கள் மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளன.

SVP கட்சியின் இளைஞர் அணி (UDC) இதை எதிர்க்கிறது. இது அரசியல் போராட்டம், இதற்குப் பள்ளிகள் உதவக் கூடாது என்கிறது. ஏற்பாட்டாளர்கள் இது அரசியல்தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் இளைஞர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்கிறார்கள்.


மூலம்: RSI
புகைப்படம்: James Eades / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button