சுவிஸ் சிலுவைச் சின்னத்தை (Schweizerkreuz) இனி சுவிஸ்ஸில் தயாரிக்கும் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற திசையில் நாடாளுமன்றம் நகர்கிறது. இதற்கான முதல் படியை நாடாளுமன்றக் குழு ஒன்று எடுத்துள்ளது.
தேசிய சபையின் (Nationalrat) கல்வி, அறிவியல், கலாச்சாரக் குழு (WBK-N) இந்த யோசனையை ஆதரித்தது. மாநிலங்கள் சபையிலிருந்து (Ständerat) வந்த ஒரு முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. மேலும் இரண்டு கோரிக்கைகளையும் ஒரு மோஷனையும் ஆதரித்தது. குழுவில் கிட்டத்தட்ட எல்லோரும் ஆதரவாக வாக்களித்தனர்.
புதிய விதி வந்தால், பொருள் சுவிஸ்ஸில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அங்கேயே பதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். “சுவிஸ்ஸில் வடிவமைக்கப்பட்டது” அல்லது “சுவிஸ்ஸில் ஆராய்ச்சி செய்யப்பட்டது” என்று சொல்லி சிலுவையைப் போட முடியாது.
இதற்குக் காரணம், அறிவுசார் சொத்துரிமையைக் கவனிக்கும் சுவிஸ் அரசு நிறுவனம் (IGE) தன் நடைமுறையை மாற்றியதுதான். On ஷூ நிறுவனத்துடன் நடந்த வழக்குக்குப் பிறகு, வெளிநாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கும் சிலுவையை அனுமதித்தது. டிசைன் போன்ற சில வேலைகள் முழுமையாக சுவிஸ்ஸில் நடந்தால் போதும் என்று சொன்னது.
இது இன்னும் சட்டமாகவில்லை. முதலில் கருத்துக் கேட்பு நடக்கும். பிறகு 2027 முதல் பாதியில் மாநிலங்கள் சபை இந்த மசோதாவை விவாதிக்கும்.
மூலம்: SRF
புகைப்படம்: Claudio Carrozzo / Unsplash





