சுவிஸ் நாடாளுமன்றத்தின் தேசிய சபை (Nationalrat) உறுப்பினர் மார்செல் டோப்ளர் (Marcel Dobler) பதவியிலிருந்து விலகுகிறார். டிசம்பர் கூட்டத்தொடர்தான் அவருக்குக் கடைசி.
46 வயதான டோப்ளர், சங்க் காலன் மாநிலத்தைச் (St. Gallen) சேர்ந்தவர். FDP என்ற தாராளவாத ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர். இந்தத் தகவலை அவர் வெள்ளிக்கிழமை X தளத்தில் பகிர்ந்தார். 2015-இல் தேசிய சபைக்குத் தேர்வானார். இப்போது 11 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தொழில் ரீதியாக புதிய பாதையைத் தேட விரும்புவதாக அவர் சொல்கிறார். என்ன செய்யப்போகிறார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறையில் அதைப் பற்றி யோசிக்கப்போவதாகக் கூறினார். அரசியலில் தொடர்ந்து ஆர்வமாக இருப்பேன், ஆனால் இனி சபையை பின்வரிசையிலிருந்து கவனிப்பேன் என்றும் சொன்னார்.
டிஜிட்டல் துறை, பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் அவர் அதிகக் கவனம் செலுத்தினார். 2017-இல் மின்னணு அடையாள அட்டையை (E-ID) கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்களில் இவரும் ஒருவர். சுகாதாரச் செலவுகளைக் குறைக்கவும் குரல் கொடுத்தார்.
அவருடைய இடத்துக்கு முதலில் வரவேண்டிய கிறிஸ்டோஃப் சூகர் (Christof Züger), வேலை காரணமாக மறுத்துவிட்டார். எனவே டொகன்பர்க் (Toggenburg) பகுதியைச் சேர்ந்த ஆன்ட்ரியா ஆப்டர்ஹால்டன் (Andrea Abderhalden) தேசிய சபைக்கு வருகிறார். அவர் இப்போது சங்க் காலன் மாநிலச் சபையின் தலைவராக இருக்கிறார். அந்தப் பொறுப்பை 2027 கோடை வரை தொடர்வார்.
மூலம்: SRF
புகைப்படம்: Andreas Fischinger / Unsplash





