தெசின் மாநிலத்தில் உள்ள அஸ்கோனா (Ascona) நகரில், தோட்ட வேலை செய்து கொண்டிருந்த 78 வயது முதியவர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
புதன்கிழமை காலை 9 மணிக்குச் சற்று முன்பு, கொல்லினெட்டா வீதியில் (Strada Collinetta) இந்தச் சம்பவம் நடந்தது. அவர் லொகார்னோ (Locarno) பகுதியில் வசிக்கும் சுவிஸ் நாட்டவர்.
தோட்ட வேலை செய்யும் போது சுமார் 5 மீட்டர் உயரத்திலிருந்து கீழே இருந்த வீதியில் விழுந்தார். ஏன் விழுந்தார் என்பது இன்னும் தெரியவில்லை. அதை விசாரணை மூலம் கண்டுபிடிப்போம் என்று மாநில போலீஸ் சொல்கிறது.
போலீசும், மீட்புப் பணியாளர்களும் (SALVA) உடனே வந்தனர். அங்கேயே முதலுதவி கொடுத்து, அவரை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.
முதலில் காயங்கள் பெரிதாக இல்லை என்றுதான் டாக்டர்கள் நினைத்தனர். ஆனால் நேரம் போகப் போக அவரது நிலை மிகவும் மோசமானது. இப்போது அவரது உயிருக்கே ஆபத்து என்று அஞ்சப்படுகிறது.
மூலம்: RSI
புகைப்படம்: Basit Abdul / Unsplash





