சுவிஸ்

1000 பிராங்க்கைத் திரும்பப் பெறப் போய் கடத்தல் வழக்கில் சிக்கிய மூவர் – லுகானோவில் விசாரணை

டிசினோ மாநிலத்தின் லுகானோ (Lugano) நீதிமன்றத்தில் இன்று ஒரு கடத்தல், கொள்ளை வழக்கு விசாரிக்கப்பட்டது. இரண்டு இளைஞர்களும் 57 வயதான போஸ்னியா நாட்டவர் ஒருவரும் குற்றவாளிக் கூண்டில் நின்றனர்.

சம்பவம் 2021 பெப்ரவரியில் நடந்தது. ஓர் இளைஞன் தெரிந்த ஒருவரிடம் 1000 பிராங்க் கொடுத்திருந்தான். முதலீடு செய்தால் பெரிய லாபம் வரும் என்று அவர் சொன்னதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தை எப்படியாவது திரும்ப வாங்க, தேவைப்பட்டால் பலவந்தமாகவும் வாங்க, அவர்கள் முடிவு செய்தனர்.

ஜூபியாஸ்கோவில் (Giubiasco) சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். நான்கு பேர் காத்திருந்தனர். அரசு தரப்பு சொல்வது இது: அந்த நபரை மிரட்டிக் காரில் ஏற்றினர். அவருடைய போனையும் பொருட்களையும் பறித்தனர். பிறகு அவர் வீட்டுக்குப் போய் இரும்புப் பணப்பெட்டியையும் விலை உயர்ந்த உடைகளையும் எடுத்தனர். லொகார்னோ (Locarno) பகுதியில் பல வீடுகளுக்கு அவரை இழுத்துச் சென்றனர். இரவு இரண்டு மணிக்கு விட்டு, டாக்ஸியில் அனுப்பினர்.

மறுநாள் பெட்டியை உடைத்துத் திறந்தனர். உள்ளே சுமார் 28,000 பிராங்க் மதிப்புள்ள பணமும் பொருட்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களைத் தேடிக்கொண்டிருந்த போலீஸ் அப்போது அவர்களை நிறுத்திச் சோதனை செய்தது.

மூவர் மீதும் கடத்தல், கொள்ளை குற்றச்சாட்டுகள் உள்ளன. 57 வயதானவர் மீது போதைப்பொருள் விற்ற குற்றச்சாட்டும் உள்ளது. அரசு வழக்கறிஞர், இரண்டு இளைஞர்களுக்கும் தலா 22 மாதம் தண்டனை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உடனே சிறைக்குப் போக வேண்டியதில்லை. 57 வயதானவருக்கு நாலரை ஆண்டு சிறையும், சுவிஸிலிருந்து வெளியேற்றமும் கேட்டுள்ளார். தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வரும்.


மூலம்: RSI
புகைப்படம்: Sasun Bughdaryan / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button