சுவிஸ்

சுவிஸில் முதல் முறை: மாற்றுத்திறனாளிகளுக்காக மூன்ஹென்ஸ்டைன் நகராட்சியில் தனிக் குழு

பாசல் அருகிலுள்ள மூன்ஹென்ஸ்டைன் (Münchenstein) நகராட்சி, மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு தனிக் குழுவை அமைத்துள்ளது. சுவிஸில் இப்படிச் செய்த முதல் நகராட்சி இதுதான்.

மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் சந்திக்கும் தடைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதே இந்தக் குழுவின் வேலை. இதற்காக நகராட்சி தனியாக ஒரு விதிமுறையையும் எழுதியுள்ளது. இதுவும் சுவிஸில் முதல் முறை என்று சுவிஸ் நகராட்சிகளின் சங்கம் சொல்கிறது.

தடை என்றால் படிக்கட்டு மட்டுமில்லை. குழுவின் தலைவி ஆண்ட்ரியா ஃபோன் பியூரன் சக்கர நாற்காலியில் இருப்பவர். நகராட்சி அலுவலகத்தின் மேல் மாடிக்குப் போக அவர் படிக்கட்டு லிஃப்டைப் பயன்படுத்த வேண்டும். அதனால் எப்போதும் முன்கூட்டியே கிளம்புவார். ஆனாலும் ஒருமுறை கூட்டத்துக்குத் தாமதமாகிவிட்டது. இன்னொரு உதாரணம் அலுவலகக் கவுண்டர்கள். அங்கே காலியா, ஆள் இருக்கிறதா என்பதை சிவப்பு, பச்சை நிறங்களில் மட்டுமே காட்டுகிறார்கள். சிவப்பையும் பச்சையையும் பிரித்துப் பார்க்க முடியாதவர்களுக்கு அது புரிவதில்லை.

குழுவில் நிபுணர்களும் நகராட்சி ஊழியர்களும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும்தான். ஊர் மக்களின் குரல் நேரடியாகக் கேட்க வேண்டும் என்பதே நோக்கம். குழு இப்போதுதான் வேலையைத் தொடங்கியுள்ளது. முதலில் ஒரு வட்டமேசைக் கூட்டம் நடத்தி மக்களின் குறைகளைக் கேட்டது. எதை முதலில் கையில் எடுப்பது என்று இன்னும் முடிவாகவில்லை.

குழுவின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்படக் கூடாது. அதனால் நகராட்சி மன்றம் ஒவ்வொரு வருடமும் குழுவின் வேலைகளைப் பற்றி அறிக்கை கொடுக்க வேண்டும் என்று விதிமுறையிலேயே உள்ளது. பாசல் பகுதி மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இதை வரவேற்கிறது. பெரிய நகராட்சிகளும் இதில் அக்கறை காட்ட வேண்டும் என்று அந்த அமைப்பு சொல்கிறது.


மூலம்: SRF
புகைப்படம்: Tim Mossholder / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button