சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்டர் (Pfister), வில் (Wil) நகரில் நடந்த பாஸ்னாக்ட் (Fasnacht) கார்னிவல் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். அங்கே தன் இசைக்குழுவோடு சேர்ந்து வாசிக்கவும் செய்தார்.
முதலில் அவர் தொழில் நிறுவனங்களின் ஒரு சந்திப்பில் பேசினார். சுமார் 170 தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் வந்திருந்தனர். சுவிஸ் எப்போதும் நடுநிலை (neutrality) கொள்கையில் உறுதியாக இருக்கும் என்றார். ஆனால் நடுநிலை இருப்பதால் மட்டும் மோதல்களில் இருந்து தப்பிவிட முடியாது என்றும் சொன்னார்.
வில் நகரம் அவருக்கு ஒரு தனிப்பட்ட இடம். அவருடைய அப்பா இந்த ஊரைச் சேர்ந்தவர். பழைய நகரப் பகுதியில் இவர்கள் குடும்பம் ஒரு பெரிய துணிக்கடையை நடத்தி வந்தது.
இந்த ஊருக்கு வரலாற்றுத் தொடர்பும் உண்டு. 1647-ல் வில் நகரில்தான் அன்றைய சுவிஸ் மாநிலங்கள் நடுநிலைக்கும், எல்லையை ஒன்றாகக் காப்பதற்கும் ஒப்புக்கொண்டன.
சந்திப்பு முடிந்ததும் அமைச்சர் ஹோஃப்பிளாட்ஸ் (Hofplatz) சதுக்கத்தில் நடந்த கார்னிவல் தொடக்க விழாவுக்குப் போனார். அங்கே பார் (Baar, ZG) நகரில் உள்ள அவருடைய குகன்மியூசிக் (Guggenmusik) குழு “ஸ்னேஃபூ” காத்திருந்தது. இது கார்னிவல் காலத்தில் உரத்த, கலகலப்பான இசை வாசிக்கும் குழு. அவரும் அந்தக் குழுவின் உறுப்பினராக வாசித்து கார்னிவலைத் தொடங்கி வைத்தார்.
மூலம்: SRF
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





