சுவிஸ்

குவார்த்தினோவில் ABB-யின் புதிய கருவி: டிசினோவில் வேலை வாய்ப்பும் பெருகுகிறது

சுவிஸ்-சுவீடன் நிறுவனமான ABB, டிசினோ மாநிலத்தில் (Ticino) உள்ள குவார்த்தினோ (Quartino) தொழிற்சாலையில் புதன்கிழமை ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தியது. இது டேட்டா சென்டர்களுக்கான கருவி.

டேட்டா சென்டர் என்பது பெரிய அளவிலான தகவல்களைச் சேமித்து, செயலாக்கும் மையம். செயற்கை நுண்ணறிவு (AI) வேலை செய்ய இவை தேவை. புதிய கருவியின் பெயர் HiPerGuard. இது ஒரு UPS. அதாவது, மின்சாரம் நின்றுவிட்டால் உடனே இயங்கி, மின்சாரம் தடைபடாமல் பார்த்துக்கொள்ளும் கருவி. மருத்துவமனைகளிலும் இது பயன்படும்.

வழக்கமான UPS கருவிகள் குறைந்த வோல்டேஜில் இயங்கும். இது அதிக வோல்டேஜில் இயங்கும். இந்த வகையில் சந்தையில் வரும் முதல் கருவி இதுதான் என்கிறது ABB. அதனால் வாடிக்கையாளர்களுக்கு செம்பு, வயரிங் செலவு குறையும்.

இந்தத் திட்டத்துக்காக ABB சுமார் 4 மில்லியன் பிராங்க் முதலீடு செய்துள்ளது. தொழிற்சாலையில் உற்பத்தி இடமும் பெரிதாக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் இங்கு வேலை செய்வோர் எண்ணிக்கை 150-லிருந்து 450 ஆக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் டிசினோவிலேயே வசிக்கிறார்கள்.

இந்த ஆலை 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐரோப்பாவில் கட்டப்படும் டேட்டா சென்டர்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டவற்றுக்கு இணையாக பெரியதாக இருக்கும் என்று நிறுவன நிர்வாகி கூறுகிறார். அதனால் ஐரோப்பாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்கிறார்.


மூலம்: RSI
புகைப்படம்: Taylor Vick / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button