சுவிஸ்

லொசான் நகரசபை உறுப்பினர்களுக்கு 50% கூடுதல் கொடுப்பனவு: வலதுசாரிகள் எதிர்ப்பு

வோ மாநிலத்தில் உள்ள லொசான் (Lausanne) நகரசபை, தன் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை உயர்த்த செவ்வாய்க்கிழமை இரவு வாக்களித்துள்ளது. இனி ஒவ்வொரு கூட்டத்துக்கும் 80 பிராங்குக்குப் பதிலாக 120 பிராங்க் கிடைக்கும்.

இது 50% உயர்வு. நகரசபையில் இடதுசாரிகளுக்குப் பெரும்பான்மை உள்ளது. நகரசபையின் நிர்வாகக் குழுவே இந்த யோசனையை முன்வைத்தது.

வலதுசாரிக் கட்சிகளான UDC, PLR இரண்டும் கடுமையாக எதிர்த்தன. நகரம் செலவைக் குறைக்க முயற்சிக்கும் நேரத்தில் இது நல்ல முன்மாதிரி இல்லை என்கிறார்கள். 2027 பட்ஜெட்டில் நகருக்கு சுமார் 78 மில்லியன் பிராங்க் பற்றாக்குறை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களின் வரிப்பணம், கவனமாகச் செலவழிக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

பசுமைக் கட்சி, சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் வேறு விதமாகப் பார்க்கிறார்கள். பல வருடங்களாகத் தொகை மாற்றப்படவில்லை, ஆனால் வாழ்க்கைச் செலவு கூடிவிட்டது என்கிறார்கள். இரவுக் கூட்டங்கள், தயாரிப்பு வேலை, சிக்கலான கோப்புகள் என்று பொறுப்பு கடினமாகி வருவதாகவும் சொல்கிறார்கள். போதிய ஈடு கிடைக்காவிட்டால், நேரமும் பணமும் குறைவாக உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடுவது இன்னும் கடினமாகும் என்பது அவர்கள் வாதம்.


மூலம்: Le Matin
புகைப்படம்: Michael D Beckwith / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button