சுவிஸ்

புகை இல்லாமல் 30 நாட்கள்: நவம்பரில் சுவிஸ்ஸில் சிறப்புப் பிரச்சாரம்

நவம்பர் மாதம் சுவிஸ்ஸில் “புகையிலை இல்லாத மாதம்”. புகைப்பவர்கள் 30 நாட்கள் சிகரெட்டைத் தொடாமல் இருக்க, நாடு முழுவதும் ஒரு பிரச்சாரம் நடக்கிறது.

இந்தப் பிரச்சாரத்தை சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகம் நடத்துகிறது. தெசின் மண்டலத்தில் (Ticino) 1,080 பேர் ஏற்கனவே பெயர் கொடுத்திருக்கிறார்கள். அங்கு தெசின் நுரையீரல் சங்கம் (Lega polmonare ticinese) உதவி செய்கிறது.

பதிவு செய்ய கட்டணம் இல்லை. பதிவு செய்தவர்களுக்கு ஒரு டைரி கிடைக்கும். புகைக்கத் தோன்றும்போது செய்யக்கூடிய வேறு விஷயங்கள் தினமும் அதில் இருக்கும். WhatsApp மூலமும் இமெயில் மூலமும் ஆதரவு கிடைக்கும். கஷ்டமாக இருந்தால் நுரையீரல் சங்க ஆலோசகர்களிடமோ, மண்டல மருத்துவமனையின் புகையிலை சிகிச்சைப் பிரிவிலோ பேசலாம்.

நண்பர்கள், குடும்பத்தினர், சக ஊழியர்களுடன் சேர்ந்து முயன்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

எலக்ட்ரானிக் சிகரெட் புகையை விட உதவாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். சாதாரண சிகரெட் பிடிக்காத இடங்களிலும் அதைப் பிடிப்பதால், பலர் முன்பை விட அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். இதனால் அடிமைத்தனம் கூடுகிறது. வீட்டில் இருப்பவர்களுக்கும் புகை பாதிப்பு வருகிறது.

சுவிஸ்ஸில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட நால்வரில் ஒருவர், மாதத்தில் ஒருமுறையாவது புகையிலை அல்லது நிகோடின் பொருட்களைப் பயன்படுத்துகிறார். பொது இடங்களில் புகைப்பிடிக்கும் தடையை விரிவுபடுத்த வேண்டும் என்று 10 பேரில் 9 பேர் விரும்புகிறார்கள்.


மூலம்: RSI
புகைப்படம்: Andres Siimon / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button