சுவிஸில் ஒரு இறைச்சிக் கடை ஹேக்கர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடையின் குளிர்பதன இயந்திரத்தில் யாரோ கை வைத்துள்ளனர்.
ஆபத்து எதுவும் வரக்கூடாது என்பதற்காக, அந்தக் கடையின் ஒரு கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் பல நாடுகளில் இப்படித்தான் நடக்கிறது. குறிப்பாக பிரான்ஸில் அதிகம். ஹேக்கர்கள் ஃப்ரிட்ஜ்கள், ஃப்ரீசர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
புதன்கிழமை இன்னொரு செய்தியும் வந்தது. இரத்தத்தைப் பாதுகாத்து வைக்கும் குளிர்பதன அமைப்புகளிலும் இப்படிக் கை வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
சுவிஸில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை. கடையின் பெயரும், இடமும் இன்னும் வெளியிடப்படவில்லை.
மூலம்: SRF
புகைப்படம்: Sebastien LE DEROUT / Unsplash





