பாசல் நகரின் குலைன்பாசல் (Kleinbasel) பகுதியில் போதைப்பொருள் விற்பவர்களாலும் போதைக்கு அடிமையானவர்களாலும் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.
பகல் நேரத்திலேயே நடைபாதைகளில் ஊசி போடுகிறார்கள் என்று குடியிருப்பாளர்கள் சொல்கிறார்கள். இரவில் கலாட்டா நடக்கிறது. விற்பவர்கள் வழிப்போக்கர்களிடம் வந்து பேசுகிறார்கள். சிலருக்கு 1980-களின் போதைப்பொருள் காலம் நினைவுக்கு வருகிறது.
இதைப் பற்றி பேச குடியிருப்பாளர்கள், அதிகாரிகள், நிபுணர்கள் கூடிய கூட்டம் நடந்தது. மண்டபம் நிறைந்திருந்தது. டிரைரோசன்மாட்டே (Dreirosenmatte) பகுதியில் போலீஸ் அதிகமானதால் அங்கு நிலைமை சற்று அமைதியானது. ஆனால் பிரச்சினை வேறு இடத்துக்கு நகர்ந்துவிட்டது. இப்போது கிளாராப்ளாட்ஸ் (Claraplatz) பகுதி மோசமான இடங்களில் ஒன்று. தெருவில் விற்பவர்கள் மூன்று மடங்காகிவிட்டார்கள் என்று ஒருவர் சொன்னார்.
பாசல் மாநில அரசின் தலைவர் கொன்ராடின் க்ராமர் (Conradin Cramer) இந்தக் கூட்டத்துக்கு முதல் முறையாக வந்தார். எளிதான தீர்வு இல்லை என்றார். கடுமையான போலீஸ் சட்டம் வந்தால் விற்பவர்களை எளிதாக வெளியேற்றலாம் என்று அவர் நம்புகிறார்.
SP கட்சியின் மஹிர் கபாக்சி (Mahir Kabakci) வேறு வழி சொல்கிறார். சூரிக், லூசர்ன், பியல் நகரங்களைப் போல, தெருவில் இறங்கி மக்களுக்கு உதவும் சமூகப் பணியாளர் சேவை வேண்டும் என்கிறார். FDP கட்சி “போதும், போதும்” என்ற பெயரில் கையெழுத்து சேகரித்து அரசை நடவடிக்கை எடுக்கச் சொல்கிறது.
மூலம்: SRF
புகைப்படம்: Lukas / Unsplash





