ஜோதிடம்

முத்தரப்பு கிண்ணத்தை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (31) மோதி வருகின்றன.

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ (38) மற்றும் கமிந்து மெண்டிஸ் சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

87 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டாக  அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்து வௌியேறினார்.

அதன்பின்னர் களம்புகுந்த அணித் தலைவர் குசல் மெண்டிஸூம் 8 ஓட்டங்களுடன் விரைவில் ஆட்டமிழந்து வௌியேறினார்.

எவ்வாறாயினும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இன்று தமது கன்னிச் சதத்தைப் பதிவு செய்தார்.

அவர் 131 ஓட்டங்களை (128 பந்துகள், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) குவித்து ஆட்டத்திற்கு பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

கமிந்து மெண்டிஸுடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்த பவன் ரத்நாயக்க, 65 பந்துகளில் 77 ஓட்டங்களை (8 பவுண்டரிகள்) விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகப்படுத்தினார்.

இதற்கமைய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் ஷஹின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, சல்மான் ஆகா மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இந்நிலையில் 26 ஓட்டங்கள் என்ற மாபெரும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 3 விக்கெட்டுக்களால் போட்டியில் வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் 26 ஓட்டங்கள் என்ற மாபெரும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி ஓவர்களில் விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

 

பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஃபகர் சமான் (127) மற்றும் சாத் பெய்க் (74) இணை 3வது விக்கெட்டுக்கு 149 ஓட்டங்களைச் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர்.

 

இறுதி நேரத்தில் அரஃபாத் மின்ஹாஸ் வெறும் 31 பந்துகளில் 61 ஓட்டங்களையும் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), ஹசன் நவாஸ் 37 ஓட்டங்களையும் விளாசி பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தனர்.

 

இலங்கை சார்பில் பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button