இலங்கைஉலகம்

ஐரோப்பிய குளிர்கால சுற்றுலாப் பருவத்தைக் முன்னிட்டு இலங்கைக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் 3 சர்வதேச விமான நிறுவனங்கள்!

ஐரோப்பிய குளிர்காலப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் இலங்கைகளுக்கான தமது விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன.

 

 

இதற்கமைய, ரஷ்யாவை தளமாகக் கொண்ட ‘அஸூர் எயார்’  விமான நிறுவனம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி முதல் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அதேவேளை, பிரான்ஸின் ‘ப்ரெஞ்ச் பீ’ (French Bee) விமான நிறுவனம் மாலைத்தீவு ஊடாகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான பருவகால விமானச் சேவைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரஷ்யாவின் ‘எஸ்7 எயார்லைன்ஸ்’ (S7 Airlines) நிறுவனம் சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க்  நகரிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க வரை வாரத்திற்கு இரண்டு நேரடி விமானச் சேவைகளை டிசம்பர் மாதம் முதல் இயக்கத் திட்டமிட்டுள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button