இலங்கைஉலகம்

நாளை உருவாகிறது முரசு புயல்

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை  அண்மித்த அந்தமான் நிகோபார் தீவுகள் கடற்பகுதிகளுக்கு மேலாக நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம், தீவிர தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

இது இன்று (அக்டோபர் 31) முற்பகல் 11.30 மணியளவில் வட அகலாங்கு 10.0° N மற்றும் கிழக்கு நெட்டாங்கு 90.2° E இற்கு அருகில் மையம் கொண்டிருந்தது.

 

இத்தொகுதி பெரும்பாலும் மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடும்.

 

இன்று பிற்பகல் 11.30 மணியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளுக்கு மேலாக மேலும் தீவிரமடையக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

 

தொடர்ந்தும் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, 2026 நவம்பர் 01ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதன் பின்னர், இத்தொகுதி 2026 நவம்பர் 02ஆம் திகதி பிற்பகல் 05.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை அண்டியதாக மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

 

இக்கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button