இலங்கை

தங்க விலை சடுதியாக வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ச்சியாகச் சரிவடைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையிலும் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவு தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

 

கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு வார காலத்தில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாவால் சரிவடைந்துள்ளது.

 

இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்:

 

கடந்த திங்கட்கிழமை (26) 332,200 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று 326,600 ரூபாவாகச் சரிவடைந்துள்ளது.

 

இந்த வார ஆரம்பத்தில் 361,000 ரூபாவாக நிலவிய 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று 355,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

 

சர்வதேச சந்தையில் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

 

உலகச் சந்தையிலும் இந்த மாத ஆரம்பத்தில் சுமார் 4,200 டொலராகக் காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, தற்போது சுமார் 3,900 டொலராகக் குறைந்துள்ளது. இதற்குப் பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாகக் சுட்டிக்காட்டப்படுகின்றன:

 

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது.

 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் (Federal Reserve) வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் வலுப்பெற்றுள்ளது. வட்டி விகிதங்கள் உயர்வது, தங்கம் போன்ற வட்டி வருமானம் தராத சொத்துகளின் மீதான ஈர்ப்பைக் குறைக்கக்கூடும்.

 

அடுத்த வாரம் அமெரிக்கத் தேர்தல் காலம் என்பதால், டொலர் பலமடைந்துள்ளதுடன் டொலருக்கான எதிர்பார்ப்புகளும் உடனடியாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button