விளையாட்டு

இங்கிலாந்திடம் போராடித் தோற்ற இலங்கை!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது.

அந்த அணி சார்பில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.

387 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணி, 45.1 ஓவர்களில் 331 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் மத்திய வரிசையில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 77 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய குசல் மெண்டிஸ் 89 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியம் டவ்சன் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இதேவேளை, இந்த மும்முனை தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுதினம் (31) இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போட்டியில் பாகிஸ்தானுடன் இலங்கை மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button