இந்தியாஇலங்கைதமிழீழம்

புதுடில்லியில் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு: இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழர் பிரச்சினைகள் குறித்து விவாதம்!

 

புதுடில்லியில் நடைபெற்ற “இனச் சுத்திகரிப்புச் சூழல்களில் நிலைமாறுகால நீதியும் மனித உரிமைகளும்” என்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள தமிழ் தரப்பு பிரதிநிதிகள், இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

தமிழர்கள் மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகளின் கதையாடல்களை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில், வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் குறித்தும் இடைக்கால நீதி குறித்தும் தமிழ் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

இந்தச் சந்திப்பில் வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வைத்தியர் சிறிநாத் மற்றும் இதர தமிழ் தரப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் உரிமைகள் சார்ந்த விவகாரங்கள் குறித்து இச்சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

#TransitionalJustice #HumanRights #SriLankanTamils #KashmiriPandits #NewDelhi #NirmalaSitharaman #GajendrakumarPonnambalam #TamilPoliticians #GlobalDialogue
#SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button