தமிழீழம்

இந்திய ஆக்கிரமிப்பை நிறுத்து!” – யாழில் துண்டுப்பிரசுரம்

கடலையும் கடல்வளத்தையும் சூறையாடும் இந்திய ஆக்கிரமிப்பை நிறுத்திடு! மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும், பெருங்கடலைப் பிரித்து கம்பனிகளுக்கு விற்கும் முன்மொழியப்பட்ட கடற்றொழில் சட்டமூலத்தைத் மீளப்பெறு! உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஜன அரகல இயக்கம்,  வசந்த முதலிகே உள்ளிட்டவர்க்ளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த  மீனவர் அமைப்புகள் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

குறித்த துண்டு பிரசுரத்தில்,

எமக்குத் தேவையான வலை உபகரணங்களுக்கு வரிக்கு மேல் வரிகள் விதிக்கப்பட்டு, அவற்றின் விலை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு படகு வாங்குவது பற்றி யோசிக்கவே முடியாது.
கடலுக்குச் செல்வதற்குத் தேவையான எரிபொருளுக்கு மானியம் வழங்கப்படுவதாகக் கூறினாலும், எப்போதுமே நாம் சாதாரண சந்தையில் உள்ள விலையிலேயே எரிபொருளை வாங்க வேண்டியுள்ளது.
அந்தோனி தோழர்கள் உயிர்த்தியாகம் செய்து நடத்திய போராட்டங்களை நினைவுகூர்ந்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் சொன்னவற்றைச் செய்வதில்லை என்பது புரிகிறது.

ஆனாலும் இன்றைக்குச் செய்வார்கள், நாளைக்குச் செய்வார்கள் என்று நாமும் மனதைத் தேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

அது போதாதென்று, எமது மீன்களை இந்தியப் படகுகள் வந்து கொள்ளையடித்துச் செல்கின்றன. எமது ஆட்சியாளர்கள் முறையான விதத்தில் இந்தப் பிரச்சினைகளில் தலையிடாமையே பிரச்சினையாகும்.

கடற்றொழில் துறையை ஒரு அறிவியல் பூர்வமான திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்வதற்கு முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே இந்த அரசாங்கத்திற்கும் எந்தவொரு திட்டமோ விருப்பமோ இல்லை என்பது புரிகிறது.

எரிபொருள் விலையைக் குறைத்திடு! கடற்றொழிலுக்கு நிவாரண விலையில் எரிபொருளை வழங்கிடு!

தரமான மீன்பிடி உபகரணங்களை நிவாரண விலையில் வழங்கிடு!
கடலையும் கடல்வளத்தையும் சூறையாடும் இந்திய ஆக்கிரமிப்பை நிறுத்திடு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும், பெருங்கடலைப் பிரித்து கம்பனிகளுக்கு விற்கும் முன்மொழியப்பட்ட கடற்றொழில் சட்டமூலத்தைத் மீளப்பெறு! என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button