சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம்!

சுவிட்சர்லாந்தின் கிளாரஸ் மாநிலத்தில் உள்ள லிந்தால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளிலும் உணரப்பட்டிருக்கலாம் என சூரிச் பெடரல் தொழில்நுட்பக் கல்லூரியின் சுவிஸ் நில அதிர்வு சேவை தெரிவித்துள்ளது.

அதிகாலை 4.37 மணியளவில் லிந்தால் பகுதிக்கு மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த அளவிலான நிலநடுக்கத்தால் மையப்பகுதியை அண்மித்த சில இடங்களில் சிறிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னரும் சேதங்கள் குறித்த முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என கிளாரஸ் மாநிலப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாவது நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பின்னர், அதே பகுதியில் 1.0 ரிக்டருக்கும் சற்று அதிகமான அளவில் மற்றொரு நில அதிர்வும் பதிவாகியுள்ளது.

சுவிட்சர்லாந்திலும் அண்டை நாடுகளிலும் நாளொன்றுக்கு சராசரியாக 3 முதல் 4 நிலநடுக்கங்கள் பதிவாகின்றன. ஆண்டுக்கு 1,000 முதல் 1,500 நிலநடுக்கங்கள் வரை பதிவாகும் நிலையில், அவற்றில் 2.5 ரிக்டர் அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான சுமார் 10 முதல் 20 நிலநடுக்கங்களையே பொதுமக்கள் உணருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button