இலங்கை

ஆடி அடங்கிய பிக்குகள்; கூடாரங்களை அகற்றிக்கொண்டு கலைந்து சென்றனர்

வண. கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக,பௌத்த பிக்குகள் முன்னெடுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, போராட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை அகற்றிய பிக்குகள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் வண. உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருக்கத் தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) காலை உத்தரவு பிறப்பித்திருந்தார்.குறித்த உத்தரவு பிக்குகளுக்கு வாசித்து காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து தற்காலிகக் கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

சிறையில் உள்ள ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, கடந்த வியாழக்கிழமை (15) மாலை பௌத்த பிக்குகள் போராட்டத்தை ஆரம்பித்தனர். சிலர் இரவு முழுவதும் போராட்ட இடத்தில் தங்கியிருந்து வெள்ளிக்கிழமையும் (16) போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

காலி வீதியின் மறுபுற நடைபாதையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button