உலகம்

ரியாத் விமான நிலையத் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹூதிகள்!; புதிய எச்சரிக்கை

யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் சவூதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

ரியாத் விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிறுவனங்கள், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சவூதி விமான நிலையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹவுதி அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஹவுதி ராணுவப் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

மக்கா மற்றும் மதினா புனித நகரங்களின் வான்வெளியைத் தவிர மற்ற சவூதி வான்வெளிகள் மற்றும் விமான நிலையங்கள் அனைத்தும் தங்களது ராணுவ நடவடிக்கைகளுக்கான இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகப் பல சர்வதேச விமான நிறுவனங்கள் ரியாத்துக்கான தங்களது சேவைப் பயணங்களை ரத்து செய்தும் இடைநிறுத்தியும் வருகின்றன.

ரியாத் விமான நிலையத் தாக்குதலுக்குப் பிறகு அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் திடீர் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களை ரியாத் விமான நிலையப் பகுதிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button