இலங்கை

ஞானசார தேரருக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) திங்கட்கிழமை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (03) சனிக்கிழமை  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகள் இன்றைய தினம் காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதவாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தண்டனையில் எஞ்சியுள்ள காலத்தைச் சிறையில் அனுபவிப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற பிடியாணைத் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள பிடியாணைத் தொடர்பில் அவரை வரும் நாளை புதன்கிழமை (07) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button