தமிழீழம்

வவுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் பகுதியில்பௌத்த வழிபாடுகளுக்கு அழைப்பு; வெடுக்குநாறி மலையை மையப்படுத்தி 260ஏக்கர்களை கோரும் தொல்பெருளியல் திணைக்களம்

வவுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260ஏக்கர்கள் தொல்பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்டத்தின் சமளங்குளம் பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிப்பாடுகளை எதிர்வரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியானது, அநுராதபுர காலத்தைச் சேர்ந்த பண்டைய பௌத்த வளாகத்தின் இடிபாடுகளைக் கொண்ட வரலாற்று நிலமாகும் என்றும்  இது வவுனியா நகரத்திலிருந்து 5கிலோமீற்றர் தொலையில் உள்ள சமளங்குளம ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1970களில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வின்படி, இந்த இடம் மத்திய அநுராதபுர காலத்தைச் சேர்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளதோடு  இயற்கையான கருங்கல் குளத்தின் மீது  ஒரு சிலை மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட பண்டைய தங்குமிடம் ஆகியவை உள்ளிட்ட பல சன்றுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த பகுதியின் கீழ் அமைப்பு எட்டு பக்கங்கள் மற்றும் படங்கள் ஆறு பக்கங்கள் வடிவங்களில் ஒரு சதுர மேடையில் கட்டப்பட்டிருப்பது தனித்துவமான அம்சமாகும் என்றும்  தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியின் போது, வெண்கலத்தால் செய்யப்பட்ட வலோகிதேஸ்வர போதிசத்துவர் சிலையும், அந்த சிலைக்குள் புத்த சிலையின் பகுதியும் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பண்டைய தொல்பொருள் நிலத்தில் தற்போது ‘சாமளங்குளம் பிள்ளையார் கோவில்’ என்ற பெயரில் நவீன இந்து கோயில் கட்டப்பட்டு வருவதால், பெரும்பாலான பௌத்தஇடிபாடுகள் நீரில் அழிக்கப்படும் அபாயத்தில் இருப்பதால் அப்பகுதியில் பௌத்த அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வெடுக்குநாறிமலையை மையப்படுத்தி 260ஏக்கர் பகுதி தொல்பொருளியல் திணைக்களத்துக்கு சொந்தமாக்குவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு அதன் முதற்கட்டத்தில் 51ஏக்கர்கள் நிலஅளவை செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button