தமிழீழம்

மட்டக்களப்பில் 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கு: 19 வருடங்களின் பின் குற்றவாளிக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் 2007 ஆம் ஆண்டு பேக்கரி உரிமையாளரின் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த  ( 38) வயதுடைய நபருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (01) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி வந்தாறுமூலை பகுதியில் அமைந்துள்ள பேக்கரி உரிமையாளரின்  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளி, அங்கு தனியாக இருந்த அவரது மனைவியை கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும், கொலை செய்த இரண்டாவது குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் முடிவில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு பின்வருமாறு தண்டனைகள் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

பேக்கரி உரிமையாளரின்  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த முதலாவது குற்றத்திற்காக ஒரு வருடம் கடுழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button