இலங்கை

இலங்கையில் முதன்முறையாக சர்வதேச பாம்புகள் மாநாடு 2026: கண்டியில் கோலாகலமாக ஆரம்பம்

இலங்கையில் முதன்முறையாக, ‘சர்வதேச பாம்புகள் மாநாடு-2026’ கண்டி கிராண்ட் கண்டியன் ஹோட்டலில், சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்திகே தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள், சர்வதேச பாம்பு இனங்கள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், பாம்பு நிபுணர்கள், இலங்கையின் பாம்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் சர்ப்பவியலாளர்கள், (வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு) சுற்றாடலியலாளர்கள் மற்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

 

இந்தியா, பூட்டான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இம்மாநாட்டை சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்திகே, மத்திய மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாம்புகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை எவ்வாறு தவிர்ந்துகொள்வது, பாம்பு விஷத்தினால் மேற்கொள்ளக் கூடிய பயன்கள், இயற்கைச் சமநிலைக்கு பாம்புகளால் ஏற்படும் சாதக நிலைமைகள் போன்ற பல விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன. பாம்புகளை பாதுகாப்பது தொடர்பான ஆய்வுகளும் துறைசார் நிபுணர்களால் சமர்ப்பிக்கப்பட்டன

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button