அரசியல்இலங்கை

மூன்று மொழிகளிலும் மன்னிப்பு கேட்க வேண்டும்; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நீதிமன்று உத்தரவு

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியதன் மூலம் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என உயர்நீதிமன்றம் இன்று (29)  தீர்ப்பளித்துள்ளது.

அதற்காக 66 இலட்சம் ரூபாய் தொகையை இழப்பீடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படத்துடன் மன்னிப்புக்கோரி மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button