
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று திங்கட்கிழமை (28) மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை அடிக்கு முன்பு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது
திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், பொலிஸாரின் செயலைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது





