
யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதை கண்டித்தும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.
காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெருமளவான பொதுமக்கள்,அரசியல்வாதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்க உறுப்பினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், “திலீபன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்”, “சிலையை அகற்றுவது அடிப்படை உரிமை மீறலாகும்”, “நினைவுகளை அழிக்காதே, நினைவு கூறும் உரிமையை மறுக்காதே” போன்ற கோஷங்கள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.





