இலங்கை

காற்றில் கலைந்தாலும் கலையாத ஒளி – தகவல் தொடர்பில் புதிய புரட்சி!

இதுவரைக்கும் லேசர் மூலம் காற்று வழியா தகவல் அனுப்பும்போது இருந்த பெரிய பிரச்சனை என்னன்னா, காற்று, வெப்பம், காற்றின் அலைவு காரணமா ஒளிக்கற்றை கலைஞ்சிடும். தகவலும் சரியா போய் சேராது.

இந்த பிரச்சனைக்கு விடை கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள Wits பல்கலைக்கழகம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் Bordeaux பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து, ‘Optical Skyrmions’ எனப்படும் ஒரு விசேஷமான ஒளி வடிவத்தை பயன்படுத்தி 270 மீட்டர் தூரத்திற்கு திறந்தவெளியில் தகவலை அனுப்பி சாதனை படைச்சிருக்காங்க. இந்த ஆய்வு Science Advances இதழில் ஆகஸ்ட் 14, 2026 அன்று வெளியாகியுள்ளது.

இந்த Optical Skyrmions-க்கு Topology என்ற ஒரு கணிதப் பண்பு இருக்கு. ஒளிக்கற்றை பார்க்க கலைந்து போனாலும், அதுக்குள்ள இருக்கிற தகவல் கலையாம அப்படியே பாதுகாப்பா இருக்குமாம்.

சோதனையில் சாதாரண சூழ்நிலையில் 98% க்கும் அதிகமான துல்லியத்துடன் தகவல் போய் சேர்ந்திருக்கு. கடுமையான காற்று அலைவு இருந்தபோதும் கூட 86% துல்லியத்தை தக்க வைத்திருக்கிறது.

இது இன்னும் 270 மீட்டர் அளவிலான ஆய்வு முயற்சி தான், முழுமையான தொழில்நுட்பம் இல்லை. இருந்தாலும் எதிர்காலத்தில் கட்டிடங்களுக்கு இடையே, விமானம், செயற்கைக்கோள் மற்றும் தரை நிலையங்களுக்கு இடையே அதிவேக இணைய இணைப்புக்கும், Quantum Communication தொழில்நுட்பத்திற்கும் இது மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Source: Peters et al., Science Advances

#ScienceInnovation #OpticalCommunication #FutureTechnology #SpaceResearch

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button