
சுவிற்சர்லாந்து
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகத்தின் சிகரமாய் விளங்கும் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் அரும்பெரும் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி, சுவிற்சர்லாந்து வாழ் ‘அக்கினிப் பறவைகள்’ (அடுத்த தலைமுறை) அமைப்பின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் விட்டுச்சென்ற உன்னதமான லட்சியத்தையும், அவரது தியாக வரலாற்றையும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடத்தும் உயரிய நோக்கில் இம்மாதம் பல்வேறு நினைவுச் செயல்பாடுகள் சுவிற்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
• 30 மணி நேர அடையாள உண்ணாவிரதம்: தியாகத்தின் அடையாளமாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நினைவேந்தல் நிகழ்வின் முக்கிய அங்கமாக இடம்பெறும்.
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னையே உருக்கித் தியாகம் செய்த தியாக தீபத்திற்கு, நமது கைகளால் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
தாயக விடுதலையே மூச்சாக வாழ்ந்து மறைந்த எம் தியாகிக்கு உரிமையோடு சுடரேற்றி அஞ்சலி செலுத்தவும், இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருந்திரளாகப் பங்கேற்றுத் தியாக வரலாறு தொடரக் கை கோர்க்குமாறும் சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினர் அன்புரிமையோடு அழைக்கின்றனர்.

நிகழ்வுகள் இடம்பெறும் இடங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இணைப்பில்:
நிகழ்வு அட்டவணை மற்றும் இடங்கள்:
• பாகம் 1: பீல் (BIEL)
• நாள்: செப்டம்பர் 15
• நேரம்: மாலை 19:00 மணி
• இடம்: Neumarktstrasse 23, 2503 Biel
• பாகம் 2: ஒஸ்டர்முன்டிகன் (OSTERMUNDIGEN)
• நாள்: செப்டம்பர் 18
• நேரம்: மாலை 19:00 மணி
• இடம்: Phoenix TNG BÜRO, Tägetlistrasse 15, 3072 Ostermundigen
• பாகம் 3: ஸ்லீரன் (SCHLIEREN – ZH)
• நாள்: செப்டம்பர் 19
• நேரம்: பிற்பகல் 14:00 மணி
• இடம்: Badenerstrasse 52, 8952 Schlieren
• பாகம் 4: கூர் (CHUR)
• நாள்: செப்டம்பர் 20
• நேரம்: பிற்பகல் 14:00 மணி
• இடம்: Bienenstrasse 9, 7000 Chur
• பாகம் 5: பேர்ண் (BERN)
• நாள்: செப்டம்பர் 25
• நேரம்: மாலை 18:00 மணி
• இடம்: Europaplatz 1B, 3008 Bern
• பாகம் 6: பேர்ண் (BERN)
• நாள்: செப்டம்பர் 26
• நேரம்: மாலை 16:00 மணி
• இடம்: Europaplatz 1B, 3008 Bern
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தகவல்: அக்கினிப் பறவைகள் அமைப்பு.





