
அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர், உறுதிப்படுத்தினார்.
டல்லாஸிலிருந்து நியூயோர்க்கிற்கு அருகிலுள்ள நியூவார்க்கிற்குச் சென்ற விமானம் 618, பால்டிமோரில் இறங்கிய நிலையில் , அங்கு வந்த எப்.பி.ஐ அதிகாரிகள் அந்த நபரை விமானத்திலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகின்றது.
இன்னிலையில் இருக்கையில் பயணி டேப்பால் கட்டி வைக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.





