உலகம்

வியட்நாம்–இலங்கை இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

Vietnam Airlines, ஹோ சி மின் நகரிலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வாரத்திற்கு மூன்று நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.

புதிய சேவையின் முதல் விமானம் BIA-க்கு வந்தபோது, Airport and Aviation Services (Sri Lanka) (Private) Limitedஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய நீர்த்தாரை வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

பயணிகளை வரவேற்க கண்டிய நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. புதிய விமானத் தொடர்பின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கைக்கு வந்த பயணிகளுக்கு இலங்கை தேயிலைச் சபையின் அனுசரணையில் Ceylon Tea பொதிகளும்வழங்கப்பட்டன.

இந்த புதிய நேரடி விமான சேவை, இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் பயணத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button