
இலங்கை ஹோமகமவில் உள்ள கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவச உற்பத்தித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், தீவிபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

குறித்த தீ விபத்தால், அப்லபகுதி முழுவதும் அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்துள்ளது, இது அருகிலுள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மற்றும் தெஹிவல நகராட்சி மன்றங்களிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவத் தொடங்கிய தருணத்தில் அங்கிருந்த சிலரை நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
தான் அங்கிருந்த சிலரை ஒரு வாயில் வழியாக வெளியே அழைத்து வந்ததாகவும், மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக் கூடும் எனச் சந்தேகிப்பதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





